ஆப்கானிஸ்தானிலிருந்து தாலிபான் போர் வீரர்கள், பாகிஸ்தானின் ராணுவ முகாம்களை கடந்த வாரம் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் சுமார் 58 பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், 5 பேர் உயிருடன் பிடிபட்டதாகவும், வீடியோக்களில் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் தப்பிக்க முயலும் காட்சிகளும் வெளியாகியுள்ளன.
After the Afghan #Taliban’s attack, Pakistan Army soldiers fled — abandoning their posts in fear.
This is the reality behind the uniform. #PakistanArmy58 Pakistani #millitakim Durand Line pic.twitter.com/w0qEZazQ0s
— Melawan (@melawanshwa) October 12, 2025
தாலிபான் வீரர்கள் பாகிஸ்தான் ராணுவ முகாம்களில் இருந்து ஆயுதங்களையும் வாகனங்களையும் கைப்பற்றும் வீடியோக்கள் வெளியாகியுள்ளது. தாலிபான் அரசு, 25 பாகிஸ்தான் ராணுவ முகாம்களை கைப்பற்றியதாகவும், அமெரிக்கா விட்டு போன ஆயுதங்கள் மற்றும் வாகனங்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ளது. இதனை பாகிஸ்தான் அரசு மறுக்கிறது.
தற்போது, ஆப்கான் வெளியுறவு அமைச்சர் முத்தாக்கி இந்தியாவில் விஜயம் மேற்கொண்டு வருவது பாகிஸ்தானை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படை ஆப்கானில் விமான தாக்குதல்கள் நடத்தியது. பதிலடியாக தாலிபான் போராளிகள் ட்யூராண்ட் எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தை பின்னோக்கி ஒட்டச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இரு நாடுகளுக்கிடையே உள்ள பதற்றம், இந்த சம்பவத்தால் கடுமையாகியுள்ளது.
