பாட்னா மெட்ரோவை அக்டோபர் 6 ஆம் தேதி முதல்வர் நிதிஷ் குமாரால் தொடங்கி வைக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு இளம் பெண் மெட்ரோவில் கூட்டத்துக்கு மத்தியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பின்னணியில் இசை ஒலிக்க, பெண்ணின் நடனத்தை ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ சில மணி நேரங்களில் 34,300-க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றுள்ளது.
पटना मेट्रो में आपका स्वागत है..
पटना मेट्रो में एक लड़की का ठुमका लगाते वीडियो तेजी से वायरल हो रहा है.. pic.twitter.com/dg4n2V0d9l
— छपरा जिला 🇮🇳 (@ChapraZila) October 11, 2025
இதற்கு இணையவாசிகள் பல்வேறு கருத்துகளை பதிவு செய்துள்ளனர். சிலர் “பாட்னா மெட்ரோவில் மூன்று நிறுத்தங்கள் மட்டுமே உள்ளதால் வேகமாக நடனமாட வேண்டும்” என்று நகைச்சுவையாகவும், “இலவசமாக நடனம் பார்க்க முடிகிறது, வேறு என்ன வேண்டும்?” என்று சிலரும் கூறியுள்ளனர். முன்னதாக, டெல்லி மெட்ரோவில் சமூக வலைதளங்களுக்காக வீடியோக்கள் எடுப்பதைத் தடுக்க அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, ஆனால் பாட்னாவில் இதுபோன்ற நிகழ்வுகள் தொடர்கின்றன.
