கரூர் மாவட்டத்தில் மக்களை சந்திக்க விஜய் அவர்கள் செல்லவிருப்பதை முன்னிட்டு, அவர் காவல்துறையிடம் முன்வைத்த நிபந்தனைகள் வெளியாகியுள்ளன.
அந்த நிபந்தனைகளில், தொண்டர்கள் தன்னிடம் நெருங்காமல் இருக்க வேண்டும், யாராவது வர முயன்றால் லத்தி சார்ஜ் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் சமூக வலைதளங்களில் பெரும் விவாதம் எழுந்துள்ளது.
இதுகுறித்து சவுக்கு சங்கர் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் அவர், “உங்கள் கட்சிக்காரர்கள் தீண்டத்தாகதவர்களா நீங்கள் கூறுவது மனிதத்தன்மைக்கு எதிரான செயல். உலகத்தில் எந்த அரசியல் கட்சியும் இப்படி ஒரு நிபந்தனை வைத்ததில்லை. இது மிகுந்த அதிர்ச்சியூட்டும் செயல்” என விமர்சித்துள்ளார்.
மேலும், “அனுமதி கடிதம் கொடுத்த சில நிமிடங்களுக்குள் அந்த கடிதம் வெளியானது. இதுதான் உங்கள் எதிரிகள் விரும்புவது. அதை உணராமல் நீங்கள் செய்கிறீர்கள் என்றால் உங்களுக்கு அரசியல் புரியவில்லை. உங்களுக்கு உங்கள் பாதுகாப்பு மட்டுமே முக்கியம் போலிருக்கிறது.
கரூர் நெரிசல் சம்பவம் நடந்து 15 நாட்கள் ஆன நிலையிலும் , இறந்தவர்கள் வீட்டுக்கு நீங்கள் சென்று இரங்கல் தெரிவிக்கவில்லை. இத்தனை விமர்சனங்களுக்குப் பிறகு போகும் நீங்கள் இப்படி ஒரு கடிதத்தை காவல்துறையிடம் கொடுத்திருப்பது உங்கள் அரசியல் அறிவின்மையை வெளிப்படுத்துகிறது. குறைந்தபட்ச அரசியல் புரிதல் கூட உங்களிடம் இல்லை” எனக் கடுமையாக சவுக்கு சங்கர் தாக்கி பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
புரோக்கரோட ஒரிஜினல் கேரக்டர் தெரியாம ஒருவாரமாக 🔥விட்ட தவெக தற்குறிகளை நினைத்தால் சிரிப்புத்தான் வருது ! pic.twitter.com/JoX4SSOXCd
— Duraimurugan (@Saattaidurai) October 11, 2025
“>
