நாமக்கல் மாவட்ட அரசியலில் முக்கியமான திருப்பமாக, கொமதேக கட்சியின் முன்னாள் நாமக்கல் மாவட்ட செயலாளரும், ஆளுமை மிக்க தலைவருமான நதி ராஜவேல், தனது ஆதரவாளர்கள் 1,500-க்கும் மேற்பட்டோருடன் அதிமுகவில் இன்று அதிகாரப்பூர்வமாக இணைந்தார்.

இந்த இணைப்பு, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் நடைபெற்றது. கடந்த 2024 லோக்சபா தேர்தலில், நாமக்கல் தொகுதியில் சுமார் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில், நதி ராஜவேல் உள்ளிட்ட முக்கிய தனி நபர்களின் ஆதரவு அதிமுகவுக்கு பெரிதும் பலம் சேர்க்கும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக கொங்கு மண்டலத்தை வலுப்படுத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார். இதன் தொடர்ச்சியாகவே நதி ராஜவேல் போன்ற முக்கியமான நிர்வாகிகளை தங்களது அணியில் இணைத்துக் கொள்வது, வரவிருக்கும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவின் திட்டமிட்ட செயல் திட்டமாக பார்க்கப்படுகிறது.