குஜராத் மாநிலம் வடோதராவில் மாட்டுத் தொழிலாளி ஒருவர், சாலையில் ஒரு தவறான நடவடிக்கையால் உயிருக்கு போராடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். தவறான முறையில் பிடிக்க முயன்ற மாட்டுடன் கட்டிய கயிறில் அவரது கால் சிக்கி, சுமார் அரை கிலோமீட்டர் தொலைவு வரை இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அதிர்ச்சியூட்டும் காட்சி சிசிடிவியில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் பரவியுள்ளது.
Worker dragged by cow in Vadodara incident caught on CCTV
A Vadodara Municipal Corporation cattle squad worker had a narrow escape while catching a stray cow. During the operation, his leg got tangled in the rope tied to the cow, putting his life at risk. The frightened cow ran… pic.twitter.com/4gaDrNRsaW
— Our Vadodara (@ourvadodara) October 10, 2025
மஹேஷ் பட்டேல் என்ற இளைஞர், வடோதரா மாநகராட்சியின் மாடுகள் பிடிக்கும் குழுவில் பணியாற்றி வருகிறார். இவர் தனது குழுவுடன் ஒரு தெரு மாட்டைப் பிடிக்கச் சென்ற போது, மாட்டின் கழுத்தில் கட்டிய கயிறில் அவரது கால் சிக்கியதால், மாடு பயந்த நிலையில் ஓடத் தொடங்கியது.
இதனால் மஹேஷ் சாலையோரம் சுமார் 500 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் செல்லப்பட்டு பலத்த காயங்களுடன் சயாஜி மருத்துவமனைக்கு சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம், தெரு மாடுகள் மீதான நகராட்சி நடவடிக்கைகள் குறித்து புதிய சர்ச்சைகளை எழுப்பியுள்ளது. மாடுகள் மீது வலுக்கட்டாயமாக நடத்தப்படும் பிடிப்புகள், அவற்றுக்கும் மனிதர்களுக்கும் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்துகின்றன என விலங்கு நல அமைப்புகள் கடந்த காலங்களில் பலமுறை எச்சரித்துள்ளன. தெருவில் அதிக எண்ணிக்கையில் கைவிடப்படும் மாடுகள், பாதுகாப்பான இடங்கள் இல்லாமல் தவிக்கும் சூழ்நிலைகளும், இதற்கு அடிப்படை காரணமாக இருப்பதாக வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.
