கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு அதிமுக தொடர்ந்து தமிழக வெற்றிக்கழகத்திற்கு ஆதரவாக நடந்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இதன் பிரதிபலிப்பாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் செல்லும் இடமெல்லாம், தமிழக வெற்றிக்கழகக் கொடியை ஏந்திய சிலர் வரவேற்பு அளிப்பது போன்ற காட்சிகள் வெளிவந்தன. ஆரம்பத்தில் இது உண்மையான தவெக ஆதரவு என கருதப்பட்டாலும், தற்போது இது அதிமுகவின் திட்டமிட்ட அரசியல் முயற்சி எனக் கூறப்படுகிறது.
உண்மையில் விஜய் கட்சியின் தொண்டர்களோ நிர்வாகிகளோ அதிமுக கூட்டங்களில் கலந்து கொள்ளவில்லை, மாறாக அதிமுக தொண்டர்கள் சிலர் விஜய் கட்சியின் கொடியை எடுத்துக்கொண்டு ஆதரவு காட்டும் நாடகமாடுகின்றனர் என சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நமது கட்சி கொடியை #Misuse செய்து கொண்டு இருக்கின்றார்கள் இதற்கும் அமைதியாக இருந்தால் எப்படி 🤧🤧🤧🤧
உடனடியாக நமது தலைமையிலிருந்து அறிக்கை வெளியிட வேண்டும் …@TVKVijayHQ @CTR_Nirmalkumar @LoyolaMani @AadhavArjunapic.twitter.com/VyXVd4wy7Y
— Vîjäy கழகம்™ 🇪🇸 (@vj_kazahagam) October 9, 2025
“>
இதனை முதலில் பெரிதாக எடுத்துக் கொள்ளாத தமிழக வெற்றிக்கழகத் தொண்டர்கள், தற்போது இதை வெளிப்படையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர். குறிப்பாக, “நமது கட்சிக் கொடியை #Misuse செய்து கொண்டு இருக்கின்றார்கள்.
இதற்கும் அமைதியாக இருந்தால் எப்படி? உடனடியாக நமது தலைமையிலிருந்து அறிக்கை வெளியிட வேண்டும்” என ஒரு தொண்டர் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, தவெக ஆதரவாளர்களிடையே அதிமுக நடவடிக்கையை எதிர்த்து கடும் எதிர்வினைகளை கிளப்பியுள்ளது
