கரூர் துயர சம்பவம் குறித்து கடந்த சில நாட்களாக நாம் தமிழர் கட்சி சார்பில் பல முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சமூக வலைதளங்களில் தமிழக வெற்றி கழகத்தை கடுமையாக விமர்சித்து வந்தனர். அரசின் அலட்சியம், நிகழ்ச்சித் திட்டமிடல் குறைபாடு போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவர்கள் தொடர்ந்து விமர்சனங்களை பதிவு செய்தனர். இதனால், சமூக வலைதளங்கள் முழுவதும் தவெக – நாம் தமிழர் கட்சி ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதங்கள் பரவி வந்தன.
மானமுள்ள நாம் தமிழர் கட்சியில் இருந்து யாராவது ஒருத்தர் உச்சநீதிமன்ற நீதிபதி இன்னைக்கு சொன்னதப்பத்தி வாய் திறந்து இருக்காங்களா ?
ஒருத்தன் இது வர ஒரு வார்த்த பேசல .
நீங்க தான் உண்மையின் பக்கம் நிக்குறீங்களா ? வெக்கமா இல்ல ?
— Prashanth Rangaswamy (@itisprashanth) October 10, 2025
“>
ஆனால், நேற்று உச்சநீதிமன்றம் அரசு தரப்புக்கு பல கடுமையான கேள்விகளை எழுப்பியதைத் தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் பக்கம் நியாயம் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, தவெக ஆதரவாளராகக் கருதப்படும் பிரசாந்த் ரங்கசாமி தனது சமூக வலைதளப் பதிவில், “மானமுள்ள நாம் தமிழர் கட்சியில் இருந்து யாராவது ஒருவராவது நீதிமன்றம் சொன்னதற்காக வாய் திறந்திருக்கிறார்களா? நீங்கள் தான் உண்மையின் பக்கம் நிக்குறீங்களா? வெக்கமா இல்ல?” எனக் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி, இரு கட்சித் தொண்டர்களிடையே புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
