காட்டில் உயிர் வாழ்வது எளிதல்ல, ஒவ்வொரு முடிவும் முக்கியம். ஒரு மான் ஆற்றைக் கடக்க முயன்றபோது, அது தவறான பாதையைத் தேர்ந்தெடுத்தது. இந்தக் காட்சி இணையத்தில் காணொளியாக வெளியாகி வைரல் ஆகியுள்ளது. மான் தண்ணீரில் இறங்கியவுடன், மறைந்திருந்த முதலை திடீரென தாக்கத் தயாரானது. அதே நேரத்தில், ஆற்றின் மறுபக்கத்தில் இருந்த நீர்யானையும் மானைப் பார்த்து கோபமாக முன்னேறியது. மான் பயத்துடன் தப்பிக்க முழு வேகத்தில் நீந்துவதற்கு முயன்றது, ஆனால் ஆபத்து எங்கும் நிறைந்திருந்தது. இந்தக் காட்சி இயற்கையின் கடுமையான விதிகளை நமக்கு உணர்த்துகிறது.
Nowhere to escape!! pic.twitter.com/XFf8mfO3oJ
— Damn Nature You Scary (@AmazingSights) October 8, 2025
முதலை மின்னல் வேகத்தில் மானைத் துரத்தியது, மான் தனது முழு பலத்துடன் தத்தளித்து தப்பிக்க முயன்றது. ஆனால், நீர்யானையும் மானை நோக்கி வந்ததால், ஆபத்து இரு மடங்காகியது. இந்த 14 விநாடி வீடியோவில், மான் ஆற்றைக் கடக்க முடியவில்லை. முதலையோ அல்லது நீர்யானையோ அதைப் பிடித்திருக்கலாம். இந்த காணொளி சமூக வலைதள பக்கத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
