அன்றாடம் இனிப்புப் பொருட்களை அதிகம் சாப்பிடுபவர்களுக்கு, தமிழக உணவு பாதுகாப்பு துறை முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் “இனிப்பு பிரியர்களுக்கான ஒரு எச்சரிக்கை!” என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட பதிவில்,  தெரிவித்ததாவது:

“உங்கள் உடலுக்கு சர்க்கரை எப்போது எதிரியாக மாறுகிறது தெரியுமா? நீங்கள் தினமும் 25 கிராமிற்கு மேல் சர்க்கரை எடுத்துக்கொள்கிறீர்களா? அப்படியானால் இது உங்களுக்கான அலர்ட்!

ஒரு தேக்கரண்டியில் சுமார் 4 கிராம் சர்க்கரை இருக்கும். இதனை கணக்கிட்டு பார்த்தால், நாம் தினசரி எடுத்துக்கொள்வது எவ்வளவு என்பதை உணரலாம். அதிக அளவு சர்க்கரை உட்கொள்வதால் சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பு போன்ற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது,” என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், “சுவைக்காக ஆரோக்கியத்தை இழக்க வேண்டாம்,” எனவும் துறை அறிவுறுத்தியுள்ளது.