இன்றைய சமூகத்தில் காதல் திருமணங்கள் அதிகரித்து வருகின்றன. பெற்றோர் எதிர்ப்பை எதிர்கொள்ளும் இளம் ஜோடிகள், ஓடிப்போய் திருமணம் செய்து கொள்ளும் சம்பவங்கள் அரங்கேறுகிறது. அந்த வகையில் சமீபத்தில், ராஜஸ்தானின் ஒசியன் மாகாணத்தின் சாம்ராவ் பகுதியில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், திருமணம் முடிந்த இளம் பெண் தனது காதலனுடன் போலீஸ் பாதுகாப்பில் வீட்டிற்குச் செல்வது காணப்படுகிறது. அவளது தாய் கண்ணீருடன் அழைத்து நிறுத்த முயன்றும், அந்தப் பெண் எந்தவித உணர்ச்சியுமின்றி திரும்பிப் போய்விட்டார்.
यह मामला ओसियां थाना क्षेत्र सामराऊ का है
यह कैसी विडंबना है आज युवा किस दिशा में जा रहा है ।इनके माता पिता ने इस लड़की को कितने अरमानों से बड़ा किया होगा लेकिन इस बेटी ने उनका बिल्कुल नहीं सोचा।
आजकल के कलयुगी युवा बुढ़ापे में अपने माता पिता को अकेले रोता छोड़कर अपने प्रेमी pic.twitter.com/j9zs02ulXy
— Omprakash Bandikui (@OmprakashBhatp4) October 9, 2025
இந்த வீடியோ சமூகத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நிகழ்வுகள் அதிகரித்து வருவதை குறித்து ஒசியன் சட்டமன்ற உறுப்பினர் பைரராம் சியோல் சட்டமன்றத்தில் பேசியுள்ளார். அவர் கூறியதாவது: “இப்போது இளம் பெண்கள் மட்டுமல்ல, மூன்று குழந்தைகளின் தாய்மார்களும் மணிக்கு 120 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிவிடுகிறார்கள். காதல் திருமணத்தில் நுழைவதற்கு முன்பு பெற்றோரின் ஒப்புதல் கட்டாயமாக்கும் ஒரு சட்டம் அமைய வேண்டும்,” எனத் தெரிவித்தார்.
சமீபத்தில் நீதிமன்றங்களிலும் இதுபோன்ற வழக்குகள் அதிகரித்து வருவதாகவும், மகள்களை இழந்த பெற்றோர்கள் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யும் நிலை உருவாகி வருவதாகவும் சட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் சமூக ஆர்வலர்கள் இதுபோன்ற சம்பவங்கள் குடும்ப பிணைப்பை பாதிக்கின்றன என்றும், இளைஞர்களிடம் உணர்ச்சி கட்டுப்பாட்டை வளர்க்கும் வகையில் விழிப்புணர்வு தேவை என்றும் வலியுறுத்துகின்றனர்.
