இன்ஸ்டாகிராமில் வெளியாகிய ஒரு வீடியோ தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் வெளியான ‘காந்தாரா: Chapter 1’ திரைப்படத்தை திரையரங்கில் பார்த்த ஒரு சிறுமி, படம் முடிந்ததும் திடீரென ஆவேசத்துடன் கத்த ஆரம்பித்தார்.
சினிமாவில் காணப்பட்ட தீவிரமான பக்தி காட்சிகள் மற்றும் புனைகதை அம்சங்கள் சிறுமியின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால், அவள் ‘பஞ்சுர்லி’ அல்லது ‘குளிக’ போன்ற தெய்வங்கள் அவளுள் ஆவியாக வந்தது போல் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.
View this post on Instagram
மேலும் அரங்கில் இருந்தோர் அவளைக் கட்டுப்படுத்த முயன்றும், சிறுமி தொடர்ந்து கத்தி நடுங்கியதால், குடும்பத்தினர் அவளை வெளியே கொண்டு சென்றனர். இந்தக் காட்சி பதிவான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி, ‘காந்தாரா’ திரைப்படத்தின் தாக்கம் குறித்து ரசிகர்களும் நெட்டிசன்களும் பல்வேறு விவாதங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
