தமிழகத்தில் மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் அடிப்படை வசதிகள் பற்றாக்குறை குறித்து எழுந்த கேள்வி தற்போது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
ஒரு பத்திரிகையாளர், “மருத்துவமனைகளில் போதுமான மருந்துகள் இல்லை” எனக் கேள்வி எழுப்பியபோது, சுகாதாரத்துறை அமைச்சர் உடனே, “அது முற்றிலும் தவறு, தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம்” என பதிலளித்தார்.
பின்னர், பத்திரிகையாளர் “உப்பு மாத்திரை” என்கிற குறிப்பிட்ட மருந்தின் பற்றாக்குறையைச் சுட்டிக்காட்டியபோது, அமைச்சர் அருகில் இருந்த மருத்துவமனை டீன் அவர்களிடம், “அந்த மாத்திரை இல்லையா?” எனக் கேட்டார். அதற்கு டீன் அவர்கள் “எல்லாம் சரியாக இருக்கிறது” என அமைச்சரிடம் கூறியதுடன், பத்திரிகையாளரை நோக்கி நாக்கை நீட்டி, சைகையால் “அதை சொல்லாதே, சொல்லக்கூடாது” என தடுக்க முயன்ற காட்சி கேமராவில் பதிவாகி இணையத்தில் பரவியுள்ளது.
பின்னாடி நிக்குற Gov. Hospital dean முகத்த கொஞ்சம் பாருங்க 😂😂#திருட்டுதிராவிடம் #DMKFailsTN pic.twitter.com/pUOAqPS3vj
— Monica TVK 🇪🇸 (@monica_offl1) October 9, 2025
“>
இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதும், நெட்டிசன்கள் கடும் விமர்சனங்களை எழுப்பி வருகின்றனர். “பத்திரிகையாளர்கள் கேட்கும் கேள்விகளுக்கே சைகையில் மிரட்டல் வந்தால், பொதுமக்கள் தங்கள் குறைகளை எப்படி சொல்ல முடியும்?” என பலர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
“மருந்து இல்லை என்ற உண்மையை மறைக்க முயலும் டீன் அதிகாரியின் நடத்தை, அரசாங்கத்தின் வெளிப்படைத்தன்மைக்கு கேள்விக்குறி” எனவும் விமர்சனங்கள் பதிவாகி வருகின்றன.
