தமிழக வெற்றிக்கழகத்தின் தோழமைக் கட்சிகளின் சார்பில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஐயூஎம்எல் கட்சியின் தலைவர் காதர் மொய்தீன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் தமிழக வெற்றிக் கழகத்தின் அமைச்சர்கள் என பலர் கலந்து கொண்ட நிலையில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் மட்டும் கூட்டத்தை புறக்கணித்தனர்.

அதே நேரத்தில் சண்முகம் மற்றும் வீரபாண்டியன் ஆகியோர் காலையிலேயே முதல்வர் விஜயை சந்தித்து பல கோரிக்கைகள் அடங்கிய மனுவை கொடுத்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் எம்பி மாணிக்கம் தாகூர் ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறியதோடு விரைவில் கூட்டணிக்கு புதிய பெயர் வைக்கப்படும் என்று அறிவித்தார்.

மேலும் இந்தியா கூட்டணியில் இணைவது தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது. ஏற்கனவே திமுக கூட்டணி கட்சிகள் அனைத்தும்  கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் திருமாவளவன் மட்டும்  அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. அதே நேரத்தில் தற்போது அவர் இந்த கூட்டணி கூட்டத்தில் கலந்து கொண்டதால் இனி தமிழக வெற்றி கழகத்திற்கு தன்னுடைய முழு ஆதரவை கொடுப்பார் என்று தெரிய வருகிறது.

ஏற்கனவே கூட்டணி கட்சித் தலைவர்களும் கண்டிப்பாக 5 வருடங்கள் ஆதரவு கொடுப்போம் என்று அறிவித்துள்ள நிலையில் வருகிற இடைத்தேர்தலில் ஐயூஎம்எல் போட்டியிடாது என்று தற்போது அந்த கட்சியின் முக்கிய தலைவர் நவாஸ் கனி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.