சிங்கப்பூரில் நடந்த ஸ்கூபா டைவிங்கின் போது பாடகர் ஜுபின் கார்க் மரணம் அடைந்த நிலையில், அசாம் மாநிலத்தில் டிஎஸ்பியாக பணியாற்றும் அவரின் உறவினரும், நண்பருமான சந்தீபன் கார்க் கைது செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து பரபரப்பு அதிகரித்துள்ளது.
முதலில் இது விபத்தாகவே கூறப்பட்டாலும், தொடர்ந்து வெளியாகிய தகவல்கள் மற்றும் சந்தேகங்களையடுத்து, விசாரணை அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் இறங்கினர். ஜுபின் கார்க் டைவிங் செய்த அதே நேரத்தில் சந்தீபனும் அருகில் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில், புலனாய்வு துறை செய்த விசாரணையில் முக்கிய தகவல்கள் வெளியானதால், சந்தீபன் கார்க் மீது குற்றச்சாட்டு உறுதியானது.
இந்த வழக்கில் இதுவரை மொத்தம் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல பாடகர் ஜுபின் கார்க் மரணம் தொடர்பான உண்மை பின்னணியைக் கண்டறிய விசாரணை துறை பல்வேறு கோணங்களில் சோதனை செய்து வருகிறது.
