கர்நாடக மாநிலம் கலூருவில் நிலமங்களம் சாலையில், சுமார் 1.5 கிலோ எடையுள்ள கூர்மையான இரும்பு கம்பிகள் சாலையில் சிதறி கிடப்பதாக தகவல் வெளியானது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் நெட்டிசன்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில், குறித்த சாலையில் ஒரு நபர் மெட்டல் டிடெக்டர் மூலம் சாலையோரம் நடந்துசென்று அந்தக் கம்பிகளை சேகரிக்கிறார் என காட்டும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து சமூகத்தில் பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.
நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள பதிவின்படி, சில மோசடி கும்பல்கள் பயணிகள் அதிகம் செல்லும் முக்கிய சாலைகளில் திட்டமிட்டு கூரிய கம்பிகளை வீசி விட்டு, வாகனங்களின் டயர்கள் பஞ்சர் ஆகும் வகையில் சதித்திட்டம் தீட்டுகிறார்கள்.
🚨 Beware, Bengaluru Vehicle Owners! Another Puncture Mafia Spotted on Nelamangala Road 🚨
Motorists travelling on the Nelamangala Road are urged to stay alert. A shocking incident has come to light where nearly 1.5 kilograms of nails were collected from the road deliberately… pic.twitter.com/gE5JiUvhUA
— Karnataka Portfolio (@karnatakaportf) October 6, 2025
“>
பின்னர், அதே கும்பல் அல்லது அதனுடன் தொடர்புடையவர்கள் அருகே தோன்றி, விலை அதிகரித்து பஞ்சர் சரிசெய்யும் சேவையை வழங்கி மக்கள் பணத்தை களவாடுகிறார்கள். இது வெறும் மோசடி மட்டுமல்லாமல், வாகனம் பஞ்சர் ஆகும்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகும் அபாயமும் உள்ளது எனவும் பதிவுகள் தெரிவிக்கின்றன.
இந்த வகையான மோசடிகளை தடுக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, போலீசார் சாலையோரங்களில் ரோந்து பணியை தீவிரமாக்க வேண்டும், சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் எனவும் நெட்டிசன்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது போன்ற சூழ்நிலைகள் தொடர்ந்து நிகழ்ந்தால், பொதுமக்களின் பாதுகாப்பு பெரிதும் பாதிக்கப்படும் என்பதால், இது தொடர்பாக விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என சமூக வலைதளங்கள் முழுவதும் விரைந்த கருத்துக்கள் பதிவாகி வருகின்றன.
