சமூக வலைதளங்களில் ஒரு அதிர்ச்சி அளிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. இதில், மூன்று சிறுவர்கள் ரயில்வே டிராக்கில் நின்று வீடியோ எடுக்க முயற்சி செய்கின்றனர். அப்போது வேகமாக வரும் ரயில் ஒன்று அவர்களை நெருங்குகிறது. அந்த வீடியோவை எடுக்கும் நேரத்தில், ஒரு சிறுவன் ரயிலால் தாக்கப்படுகிறான். மற்ற சிறுவர்கள் அதிர்ச்சியடைந்து ஓடுகின்றனர். இந்த வீடியோ பார்க்கும்போது பயமும் அதிர்ச்சியும் ஏற்படுகிறது.
— Abyss of human stupidity (@KarmaCIip) October 4, 2025
இந்த சம்பவம் நடந்தது பங்களாதேஷின் ரங்க்பூர் பகுதியில் உள்ள சிங்கிமாரி ரயில்வே பாலத்தில். வீடியோவை எடுத்த சிறுவன் லிகான் என்ற 14 வயது பையன், அவன் தோள் பகுதியில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றான். அதிர்ஷ்டவசமாக அவன் உயிர் தப்பினான். சமூக வலைதளங்களில் இந்த வீடியோ பரவியதால், ரீல் அல்லது டிக்டாக் வீடியோக்களுக்காக ஆபத்தான இடங்களுக்கு செல்வதன் ஆபத்தைப் பற்றி பலர் எச்சரிக்கை செய்கின்றனர்.
