கேரளாவில் நடைபெற்ற ஓணம் பம்பர் லாட்டரியில் ஆலப்புழாவைச் சேர்ந்த பெயிண்ட் கடை ஊழியர் சரத் எஸ் நாயர் என்பவர் முதல் பரிசாக ரூ.25 கோடியை வென்று அதிர்ஷ்டசாலியாகியுள்ளார். கொச்சி நெத்தூரில் உள்ள ஒரு லாட்டரி கடையில் இவர் இந்த டிக்கெட்டை வாங்கியிருந்தார். முதலில் இந்த டிக்கெட் பாலக்காட்டில் விற்கப்பட்டதாக கூறப்பட்டாலும், பின்னர் கொச்சியில் விற்கப்பட்டது உறுதியானது. இந்த பரிசு வென்ற செய்தி அவரை எல்லையற்ற மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த லாட்டரியில் ரூ.25 கோடி முதல் பரிசைத் தவிர, இரண்டாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.1 கோடியும், மூன்றாம் பரிசாக 20 பேருக்கு தலா ரூ.50 லட்சமும் வழங்கப்பட்டுள்ளன. மொத்தம் 75 லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகவும், பாலக்காட்டில் 14.07 லட்சம் டிக்கெட்டுகளுடன் அதிக விற்பனை நடந்ததாகவும் தெரிகிறது. ஆனால், தமிழ்நாட்டில் லாட்டரி விற்பனை சட்டவிரோதம் என்பதால், இங்கு விற்கப்படும் டிக்கெட்டுகளுக்கு பரிசு வழங்கப்படுவது கேரள அரசால் மறுக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
