பீஹார் மாநிலம் பட்னா மாவட்டத்தில் உள்ள பகுதியில், துர்கா பூஜையின் 10வது நாள் இரவில் நடந்த நடன நிகழ்ச்சிக்காக மேற்கு வங்கத்தில் இருந்து அழைக்கப்பட்டிருந்த ஒரு மைனர் பெண் விழா முடிந்தபின் ஐந்து இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்.

இந்த கொடூர சம்பவம் பெயுர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள விஷ்ணுபுர் பக்ரி பகுதியில் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன், பீஹார் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்தனர்.

DSP சுஷீல் குமார் நேரில் விசாரணை மேற்கொண்டதுடன், மாநகர மேற்கு SP பானுபிரதாப செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, “மர்மமான முறையில் நடந்த இந்த சம்பவம் குறித்து பெயுர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராஜீவ் குமார் தலைமையிலான சிறப்பு படை, வெறும் 3 மணி நேரத்தில் அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்தது” என்றார்.

கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் பட்னா நகரத்தின் டானாபூர், கங்கர்பாக் மற்றும் பெயுர் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும், இவர்களில் ஒருபெண் ப்ரியா விஸ்வாஸ் என்பவரும் உள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது. அதோடு அசோக் குமார், தீராஜ் குமார், ஆரியன் குமார், பிரின்ஸ் குமார், ஷஷிபூஷன் குமார் மற்றும் சிந்து குமார் ஆகியோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

தற்போது பாதிக்கப்பட்ட பெண்ணிடம் போலீசார் மெடிக்கல் சோதனை நடத்தி, வழக்குப் பதிவு செய்து, தொடர்ந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.