திருமண சீசன் வந்துடுச்சு… ஆடலோ, பாடலோ இல்லாமல் நடக்குற கல்யாணமே இல்ல. ஆனா கிராமத்தில் நடைபெறும் கல்யாணம் வித்தியாசமாக இருக்கும். சமீபத்தில் வைரலாகும் வீடியோவொன்றில், கல்யாண முடிந்து மணப்பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரும்போது, மாப்பிள்ளை நடனமாட தொடங்கினார்.

 

அவரோட இந்த ஆட்டம் பார்ப்பவர்களை சிரிப்பில் மூழ்க வைத்தது. அப்படியே எதிர்பாராத தருணமாக மணமகளும்,  மாப்பிள்ளையுடன் சேர்ந்து நடனமாட தொடங்கினார். இந்த கணவனும், மனைவியும் ஆடும் வீடியோவுக்கு பார்வையாளர்கள் “இதுதான் உண்மையான காதலும் கல்யாண சந்தோஷமும்!”ன்னு கமெண்ட் செய்துள்ளனர்.

இந்த வீடியோவைக் @Ks_Jaatni என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்ததுமே 52,000க்கும் மேற்பட்ட பார்வைகள் வந்துள்ளன. குடும்பத்தினரும் சந்தோஷத்துல கைகளை தட்ட, சுற்றுலா வந்த விருந்தினர்கள் வீட்டிற்கு செல்லாமல் நடனத்தை பார்த்துக் கொண்டிருந்தனர்.