வனவிலங்குகளுக்கு ஆபத்து என்பது நொடி பொழுதில் வந்து விடும். இந்த சூழ்நிலையில், குட்டி ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாட வந்த சிங்கங்களை, தன்னுடைய தைரியத்தால் ஓட்டியதாம் ஒரு தாய் ஒட்டகச்சிவிங்கி. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவலாகப் பகிரப்பட்டு பலரையும் பயமும் பரிதாபமும் கலந்த அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கு.

 

 

View this post on Instagram

 

A post shared by Wildfriends Africa (@wildfriends_africa)

வீடியோவில், ஒரு தாய், தன் குட்டி ஒட்டகச்சிவிங்கியுடன் அங்கும் இங்கும் திரிகிறது. அந்த நேரத்தில், ஒரு 5 அல்லது 6 சிங்கங்கள் கூட்டமாக வந்து தாக்க முயற்சி செய்தது. உடனே அந்த தாய், தன் நீளமான கால்களால் அந்த சிங்கங்களை தாக்கி அங்கிருந்து விரட்டியது. தாய் ஒட்டகச்சிவிங்கியின் இந்த அற்புதமான தைரியத்தை பார்த்த சிங்கங்கள் கூட அந்த குட்டிய பாக்கவே அஞ்சுற மாதிரி போயிடுச்சு.

இந்த வீடியோ ‘wildfriends_africa’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடப்பட்டு வைரலாகி வருகிறது. இதுவரை 42,000-க்கும் அதிகமான பேர் இந்த வீடியோவை பார்த்துள்ளனர். “தாய்மையே பெரிய சக்தி”னு ஒருவர் கமெண்ட் பண்ணிருக்க, “சிங்கங்களைப் பார்த்தாலே பயமா இருக்கு, ஆனா இந்த தாயை பார்த்தால் கம்பீரமா இருக்கு!”னு இன்னொருவர் ரியாக்ஷன் குடுத்திருக்காரு.