பீகார் மாநிலத்தில் சட்டசபை பதவிக்காலம் வரும் நவம்பர் மாதம் முடிவடையும் நிலையில் புதிய தேர்தலை நடத்துவதற்கான பணிகள் அந்த மாநிலத்தில் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் அதனை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் இன்று மாலை பீகார் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதி வெளியாகும் என்று தகவல் வெளிவந்த நிலையில் தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பீகார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி நவம்பர் 6 மற்றும் நவம்பர் 11 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெறும். மேலும் இதைத் தொடர்ந்து நவம்பர் 14ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
