மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் நேற்று கனமழை பெய்த நிலையில் சுகியா பொகாரி மற்றும் மிரிக் ஆகிய இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஒரு இடத்தில் பாலம் இடிந்து விழுந்தும் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் கிட்டத்தட்ட 20 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்ததோடு அனைத்து விதமான உதவிகளையும் அரசாங்கம் செய்யும் என உறுதி கொடுத்திருந்தார். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக எம்பி கஜென் முர்மு இன்று ஆய்வு செய்வதற்காக சென்றார்.

 

அப்போது அவர் மீது பயங்கரமான தாக்குதல் நடத்தியதோடு கற்களை வீசியும் கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் அவர் முகம் முழுவதும் ரத்த காயங்களுடன் அங்கிருந்து தப்பிய நிலையில் அவரது கார் கண்ணாடியை உடைத்தும் சேதப்படுத்தினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது