ஹைதராபாத்தில் பிரபல மருத்துவரான டாக்டர் பிரவீன் கோடுரு தனது புதிய டெஸ்லா மாடல் ஒய் காருக்கு பாரம்பரிய முறையில் வாகன பூஜை செய்து, அதன் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்தியாவில் புதிய வாகனம் வாங்கும்போது, பூஜை செய்வது ஒரு முக்கிய பழக்கமாகும். இதன்படி, அவரது சிவப்பு நிற டெஸ்லா கார் மலர்களாலும், தேங்காய்களாலும் அலங்கரிக்கப்பட்டு, மந்திரங்களுடன் பூஜை செய்யப்பட்டது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி, பாரம்பரியமும் நவீன தொழில்நுட்பமும் ஒன்றிணைந்த அழகிய காட்சியாக பலரையும் கவர்ந்துள்ளது.
No car , including Tesla, can get a five star safety rating in Indian culture, unless a vahan Pooja is done @elonmusk @TeslaClubIN @Tesla_India 😀🙏🏻😛 pic.twitter.com/5TxuGQzcPY
— Dr Praveen koduru (@drpraveenkoduru) October 1, 2025
இந்த பதிவு ஆயிரக்கணக்கானவர்களால் பார்க்கப்பட்டு, பலர் தங்கள் வேடிக்கையான கருத்துகளை பகிர்ந்தனர். ஒருவர், “இந்தியாவில் டெஸ்லாவுக்கு கூட தேங்காய்-மிளகாய் பூஜை தேவை” என்று கிண்டலாக கூறினார். மற்றொருவர், “ஆட்டோபைலட்டுக்கு கூட கடவுளின் ஆசிர்வாதம் வேண்டும்” என்று மகிழ்ச்சியாக கருத்து தெரிவித்தார். இன்னொருவர், “தேங்காய் உடைக்காவிட்டால், ஃபைட்டர் ஜெட் ஆனாலும் ஏற்க முடியாது” என்று கூறினார். இந்த பூஜை, இந்திய பண்பாட்டில் வாகனங்கள் வெறும் போக்குவரத்து சாதனமாக மட்டுமல்ல, குடும்ப உறுப்பினராகவும் கருதப்படுவதை எடுத்துக்காட்டுகிறது.
