தவெக தலைவர் விஜய்யின் உத்தரவின்பேரில், கட்சியின் முக்கிய பொறுப்பாளரான ஆதவ் அர்ஜூனா, டெல்லியில் காங்கிரசைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ஒருவரை ரகசியமாக சந்தித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கரூரில் நடைபெற்ற தவெக நிகழ்வைத் தொடர்ந்து ஏற்பட்ட சம்பவங்களை முன்னிட்டு, தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் முன்ஜாமின் மனுக்காக உச்சநீதிமன்றத்தை நாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், வழக்குகளைத் திறம்பட எதிர்கொள்வதற்காகவே இந்த ரகசிய சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது.

மேலும், தற்போதைய சட்டப் பிரச்சனைகள் மற்றும் நெருக்கடிகளில் இருந்து கட்சியை மீட்கும் வகையில் காங்கிரசின் வழிகாட்டுதலை நாடி, அதன் மூத்த தலைவர்களை ஆதவ் அர்ஜூனா விரைவில் சந்திக்கவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

உச்சநீதிமன்ற வழக்குகளின் நகர்வு, எதிர்கட்சிகளின் பார்வை, கூட்டணி சாத்தியங்கள் போன்றவை குறித்தும் இந்த சந்திப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன என்று கூறப்படுகிறது.