இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளியில், ஒரு சுட்டிக் குழந்தைக்கும் அவரது அத்தைக்கும் இடையே நடக்கும் காரசாரமான வாக்குவாதம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. காணொளியில், குழந்தை மற்றொரு குழந்தையை அடிக்க, அந்தக் குழந்தையின் தாயான அத்தை, “எதற்காக என் பிள்ளையை அடித்தாய்?” என்று கேட்கிறார். இதற்கு பதிலாக, சுட்டிக் குழந்தை தனது அத்தையை மிகவும் கடுமையாகவும், தைரியமாகவும் பேசி, எதிர்க்கத் தொடங்குகிறது. இந்த வாக்குவாதம் குழந்தையின் உரிமையில் நடக்கும் செல்லச் சண்டையாக இருந்தாலும், பார்ப்பவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.

இந்தக் காணொளியை சிலர் குழந்தையின் துணிச்சலான பேச்சைக் கண்டு வியந்து, அதன் சுட்டித்தனத்தை ரசித்து வைரலாக்கி வருகின்றனர். ஆனால், சிலர் குழந்தை இவ்வளவு கடுமையாக பேசுவதை விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த செல்லச் சண்டை பலருக்கு பொழுதுபோக்காக அமைந்து, சமூக வலைதளத்தில் பரவலான கவனத்தைப் பெற்று வருகிறது.