இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியான ஒரு காணொளியில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒரு நபர் ஆட்டோ ஓட்டுனரிடம் குறிப்பிட்ட இடத்திற்கு போக வேண்டும் என்று கேட்கிறார். ஓட்டுனர் அதற்கு 500 ரூபாய் வசூலிக்கிறேன் என்று கூறுகிறார். உடனே, அந்த வெளிநாட்டு நபர் தமிழில் “500 ரூபாயா?” என்று கேட்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், “தமிழா? 100 ரூபாய் தான் சரி, உட்காருங்கள்” என்று கூறி அவரை அழைத்து செல்கிறார்.

View this post on Instagram

A post shared by Ami (@amigo_250)

இந்தக் காணொளி, வெளிநாட்டுவர் தமிழ் தெரிந்ததும் விலையைக் குறைத்த ஓட்டுனரின் செயல் மக்களை அதிசயப்படுத்தியுள்ளது. சமூக வலைதளத்தில் இது வைரலாகி, தமிழ் தெரிந்தால் கூடுதல் நன்மை கிடைக்கும் என்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள், உள்ளூர் மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது.