கேரளாவின் பாலக்காடு மாவட்டம், பல்லசனா பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி வினோதினி, விளையாடிக்கொண்டிருந்தபோது வலது கையில் கடும் காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் பாலக்காடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு எக்ஸ்ரே பரிசோதனையில் கையில் எலும்பு முறிவு இருப்பது உறுதியானது. மருத்துவர்கள் உடனே அவரது கையில் பிளாஸ்டர் கட்டு போட்டனர். ஆனால், அதன்பின் சிறுமியின் கையில் வீக்கம் ஏற்பட்டு, நீர்க்கட்டி உருவானது. வலி தாங்க முடியாமல் சிறுமி துடித்ததால், மருத்துவர்கள் அவரது வலது கையை முழங்கை வரை வெட்டி அகற்றியதாக தெரிகிறது.
இந்தச் சம்பவத்தில், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் சிறுமியின் கை அகற்றப்பட்டதாக குடும்பத்தினரும், உறவினர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், உடனடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். விசாரணைக் குழுவில் டாக்டர்கள் பத்மநாபன் மற்றும் காவ்யா இடம்பெற்றுள்ளனர்.
மேலும், சிறுமிக்கு மேற்சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
