கரூரில் நடந்த சம்பவத்தை தொடர்ந்து, முக்கிய அரசியல் பிரமுகர் செந்தில்பாலாஜி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளுக்கெல்லாம் பதிலளிக்கும் வகையில் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், “காலை முதல் இரவு வரை தலைவனை பார்ப்பதற்காக வந்த தொண்டர்களுக்கு ஒரு தண்ணீர் பாட்டில்கூட தமிழக வெற்றிக்கழக தரப்பினர் வழங்கவில்லை. அங்கு ஆயிரக்கணக்கான செருப்புகள், கட்சி துண்டுகள் கிடந்தாலும், ஒரு தண்ணீர் பாட்டிலோ பிஸ்கட் பாக்கெட்டோ கிடைக்கவில்லை” என கூறி, இந்த துயரத்துக்கு தமிழக வெற்றிக்கழகமே காரணம் என குற்றம் சுமத்தியிருந்தார்.
இதற்கு பதிலடியாக தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகி லயோலோ மணி, தனது “X” பக்கத்தில் பகிர்ந்த பதிவில், “பொய் பேசுவதை நிறுத்துங்கள் மிஸ்டர் @V_Senthilbalaji. எங்கள் தோழர்கள் எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்தார்கள். வாய் கூசாமல் எப்படி பொய் பேசுறதுக்கு மனசு வருகிறது? மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” என வேடிக்கை கலந்த முறையில் கடும் கண்டனம் தெரிவித்தார். இவரது பதிவுடன் இணைக்கப்பட்ட சம்பவ இடத்தின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பகிரப்பட்டு வைரலாகியுள்ளது.
பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ளுங்கள் மிஸ்டர் @V_Senthilbalaji.
எங்கள் தோழர்கள் எல்லோருக்கும் தண்ணீர் கொடுத்தார்கள். வாய் கூசாமல் எப்படி பொய் பேசுவதற்கு மனசு வருகிறது. மக்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். pic.twitter.com/1F6ruvPXbc— Loyola Mani (@LoyolaMani) October 1, 2025
