கரூர் சம்பவம் குறித்து பல்வேறு தரப்பினரும் தமிழக வெற்றி கழகத்திற்கு தங்களது ஆதரவை அல்லது எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் சூழலில், பிரபல நடிகர் சத்தியராஜ் குடும்பத்தில் இருந்து வெளிவந்த 3 விதமான கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளன. நடிகர் சத்தியராஜ், எப்போதும் போல நேர்மையான மற்றும் சீரான அரசியல் பார்வையை முன்னிலைப்படுத்தி, யாரையும் குறை கூறாமல் ஒரு பொதுவான நிலைப்பாட்டை மட்டும் வெளியிட்டார். ஆனால், அவரது மகள் திமுகவில் முக்கியப் பொறுப்பில் இருப்பதனால், விஜய் மற்றும் அவரது கட்சியை நேரடியாகவே கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.
மாறாக, சத்தியராஜின் மகனும் நடிகருமான சிபி சத்யராஜ், விஜயின் தீவிர ரசிகராக இருப்பதை முன்பே பலமுறை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், விஜய் நடித்த படத்தில் இடம்பெற்ற, “நீங்கள் என்னை மட்டுமல்ல, என் இமேஜையும் ஒன்றும் செய்ய முடியாது” என்ற வசனத்துடன் கூடிய காட்சியை பகிர்ந்ததால், அது ஒரு நேரடி அரசியல் ஆதரவாகவே கருதப்படுகிறது. ஒரே குடும்பத்தில் அரசியல் குறித்து வித்தியாசமான மூன்று பார்வைகள் இருப்பது மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது .
சிபிராஜ் சத்யராஜ் insta story பாருங்கள். அப்பா பட்டும் படாமல் பேசினார், மகள் விஜயை எதிர்த்து பேசினார், மகன் விஜய் இமேஜ் ஐ யாராலும் உடைக்க முடியாது என்று ரீல் ஷேர் செய்கிறார்..nice.. pic.twitter.com/CNauUjoqbi
— Nordnomad (@arcot2arctic) October 2, 2025
