கரூர் துயரம் குறித்து, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் எந்தவித வருத்தமும் தெரிவிக்காமல், “உங்களுக்கு பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்; நான் என் வீட்டிலும் அலுவலகத்திலும் இருப்பேன்” என சினிமா வசன பாணியில் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது இந்த பதில், பொதுவாக பொறுப்புள்ள அரசியல் தலைவருக்கேற்ப தகுந்ததா? என்ற கேள்விகளை எழுப்ப, இதற்கு எதிராக பலரும் தங்களது ஆதங்கங்களை சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர். குறிப்பாக, “விஜய் சினிமா வசனங்களை பேசுகிறார், உண்மையான ஆதாரமின்றி ஆளுங்கட்சி சதி செய்தது என கூறுவது கூடுதல் அதிருப்தியை ஏற்படுத்துகிறது” எனக் கூரும் குரல்கள் அதிகரித்துள்ளன.
இந்த சூழலில், விஜய் ஆதரவாளர் ஒருவர் வெளியிட்ட காணொளி தற்போது கேலி, கிண்டலுக்கு உள்ளாகியுள்ளது. அந்த வீடியோவில் “விஜய் மக்களுக்காக என்ன செய்தார்?” என்ற கேள்விக்கு பதிலாக, அவர் சினிமாவில் பெற்ற விருதுகளை காண்பித்ததுடன், “நீங்கள் என்ன சாதித்தீர்கள்?” என எதிர்வினை கொடுத்தது, அரசியல் விவாதத்தில் தொடர்பற்ற மற்றும் அடிப்படை அறிவற்ற நடத்தை என பலரும் விமர்சிக்கின்றனர். இதன் மூலம், “தமிழக வெற்றி கழகத்தினருக்கு அரசியல் அறிவு துளியளவும் இல்லை” என்பதற்கு இதுவே சான்று என நெட்டிசன்கள் பலரும் சமூகத்திலிருந்து ஆதரவை பெற வேண்டிய தருணத்தில், இப்படியான சினிமா நடுநிலைகள் அரசியல் இழிவை மட்டுமே பிரதிபலிக்கின்றன என கூறி விமர்சனம் செய்து வருகின்றனர்.
Virtual warriors🔥🔥🔥 pic.twitter.com/gPNueCtfXd
— U2 Brutus (@U2Brutus_off) October 3, 2025
