தமிழகத்தில் அரசியல் சூழல் மாறிக்கொண்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு வெற்றிக் கழகத்திற்கு பல தரப்பிலிருந்து ஆதரவு நிலைத்துவந்தாலும், அதில் தனிச்சிறப்பானது அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தொடர்ச்சியான ஆதரவு என்பதில் சந்தேகம் இல்லை. பல்வேறு மேடைகளிலும் விஜய் அவர்களை நேரடியாக அல்லது மறைமுகமாக ஆதரித்து பேசிவரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு, தற்போதைய சூழலில் தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களிடையே நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. அவர் எந்த மாவட்டத்திற்கு சென்றாலும், தமிழக வெற்றிக்கழக தொண்டர்கள் அதிமுக கூட்டங்களில் கலந்துகொண்டு கட்சி கொடி ஏந்தி, போஸ்டர், பேனர் மூலம் அவருக்கு ஆதரவு தெரிவிக்கின்றனர். இது இரண்டு கட்சிகளுக்கிடையேயான நெருக்கத்தையும், எதிர்கால கூட்டணிக்கான ஊக்கத்தையும் உருவாக்கி வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் இணையத்தில் மீண்டும் பரவி வரும் ஒரு வீடியோ, புதிய சர்ச்சைக்கு தூணாக அமைந்துள்ளது. அதில், ஆதவ் அர்ஜுனா சில மாதங்களுக்கு முன்பு பேசியதாகக் கூறப்படும் வீடியோவில், “பாஜக தலைவர் அண்ணாமலை தனித்து நின்றாலும் 18% வாக்கு எடுப்பார். ஆனால் எடப்பாடியை நம்பி யாரும் கூட்டணிக்கு செல்லப் போவதில்லை” என கிண்டலாக கூறியுள்ளார். தற்போது விஜய்க்கு ஆதரவாக உறுதியாக நிற்கும் எடப்பாடி பழனிச்சாமியை, தமிழக வெற்றிக்கழகத்தின் முக்கிய நிர்வாகிகள் எந்த கோணத்தில் பார்க்கிறார்கள் என்பது குறித்து சமூக வலைதளங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
நம்ம @EPSTamilNadu பற்றி @AadhavArjuna & @BussyAnand பேசிக் கொண்ட அந்த காட்சி 🤦 https://t.co/toAz9i86Xp pic.twitter.com/y8bxPSoL0H
— Prince (@ImPrinze) October 3, 2025
