கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.
இந்த சம்பவத்தை அடுத்து, தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த பதிவு வன்முறையை தூண்டும் வகையில் இருந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்ததால், அவரை கைது செய்யப்படுவார் என செய்திகள் பரவின.
இந்நிலையில், இன்று (செப்.30) சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த ஆதவ் அர்ஜுனா, “கரூர் பேரிழப்பில் 41 பேர் உயிரிழந்தது என்னை மிகவும் பாதித்துள்ளது. தற்போது நான் எதையும் பேசக்கூடிய மனநிலையில் இல்லை. விரைவில் மக்களை சந்தித்து என் கருத்துகளைப் பகிர்வேன்” என்று தெரிவித்துள்ளார். அவரது இந்தக் குறிப்பு, தன்னைச் சுற்றியுள்ள சர்ச்சைக்கு பதிலாகவும், எதிர்கால நடவடிக்கைக்கு முன்னோட்டமாகவும் கருதப்படுகிறது.
