ஆந்திர மாநிலத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் இலவச பஸ் பயண சேவை பரவலான வரவேற்பைப் பெற்றாலும், அதை தவறாக பயன்படுத்தும் சிலர் மூலமாக பரிதாப சம்பவங்கள் நடைபெறுகின்றன. சமீபத்தில் கடப்பா மாவட்டத்தில், பஸ் வரவில்லை என்ற காரணத்தால் ஒரு பெண் பயணி, பஸ் டிரைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்த சம்பவம் சித்தவட்டம் மண்டலத்திலுள்ள பாகராபேட்டை கிராஸ் ரோடு பகுதியில் நடந்துள்ளது. பஸ்கள் வராத்தால் நீண்ட நேரம் காத்திருந்த பயணிகள் குழுவில் இருந்த அந்த பெண், பஸ் ஓட்டுநர் நேரில் வந்ததும் கடும் கோபத்தில் அவர் மீது  வாக்குவாதத்தில் ஈடுபட்டார். “இவ்வளவு பயணிகள் காத்திருக்கும்போது பஸ் நிற்காதது ஏன்?” எனக் கேட்டபடி, டிரைவரை நேரடியாக தாக்குவதைப்போல் ஆவேசத்தில் பேசியுள்ளார்.

பின்னர் பஸ் ஓட்டுநர் இருக்கைக்கு ஏறி, அந்த இடத்தில் நேராக அமர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த பெண், பிறகு பஸ்சுக்குள் சென்று இருந்தார். அந்த இடத்தில் இருந்த சிலர் இந்த சம்பவத்தை வீடியோ எடுத்துத் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளனர். இதனால் இது வைரலாக பரவியது. இதைக் கண்ட நெட்டிசன்கள், “இலவச சேவை கொடுத்தால் இப்படியா நடந்து கொள்வது?” என்ற கேள்வியுடன், பஸ் ஓட்டுநர்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.