உத்தரப்பிரதேச மாநிலம் கொண்டா மாவட்டத்தில் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. பைக்கில் சென்ற காதலர் ஜோடியை கிராமத்தினர் திடீரென நிறுத்தினர். அவர்களின் காதல் குறித்து முன்பே சந்தேகத்தில் இருந்த மக்கள், அன்றே கல்யாணம் நடத்த முடிவு செய்ததோடு, இருவரின் குடும்பத்தாரையும் அழைத்து வந்தனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Atul Kumar Yadav (@press_atul_yadav)

இதையடுத்து, அவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த சம்பவம் கொடாரே போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட கம்மாரியா கிராமத்தில் நடந்துள்ளது. 19 வயதான சோனு மோர்யா என்பவர் பைஜ்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர். அவர் கம்மாரியா மார்க்கெட்டில் தேநீர் கடை நடத்துகிறார்.

இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் நிஷா மோர்யாவும் என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஞாயிறு கிழமை இருவரும் பைக்கில் சுற்றித் திரிந்த போது, கிராம மக்கள் இருவரையும் கைப்பற்றினர். இதையடுத்து, சம்பவ இடத்திலேயே கோவிலுக்கு அழைத்து சென்று, குடும்பங்களின் சம்மதத்துடன் திருமணம் நடத்தப்பட்டது.

திருமண வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சோனு மற்றும் நிஷா ஒருவருக்கொருவர் மாலை மாற்றி, நிஷாவின் நெற்றியில் சோனு குங்குமம் வைத்து திருமணத்தை முடித்த காட்சி இடம்பெறுகிறது. இந்த அதிரடியான சம்பவம் தற்போது கொண்டா மாவட்டத்தை பரபரப்பில் ஆழ்த்தி உள்ளது. “காதலர் ஜோடி” என வெளியே சென்றவர்கள், “கணவன், மனைவி” ஆகி வீடு திரும்பியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.