சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்திய வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. இதில், சேலை அணிந்திருந்த பெண், கையில் ஒரு லட்சம் மதிப்புள்ள செல்போனை வைத்துக்கொண்டு, வெறும் ₹300 ரூபாய் ஆட்டோ கட்டணத்துக்காக டிரைவருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபடும் காட்சி பதிவாகியுள்ளது.

 

இந்த சம்பவம் உபர் ஆப் மூலமாக ஆட்டோ ஒன்றை பெண் ஒருவர் புக் செய்த பிறகு, தனது இடத்துக்கு சென்றதும் கட்டணம் கொடுக்காமல் தகராறு செய்த போது நடந்ததாக கூறப்படுகிறது. வீடியோவில், பெண் மற்றும் ஆட்டோ டிரைவர் இருவரும் தங்களது மொபைல்களை எடுத்து வீடியோ எடுக்கத் தொடங்குவார்கள்.

அந்த நேரத்தில், “இவர் ரூ. 30,000 மதிப்புள்ள சேலையுடன் இருக்கிறார், கைபேசியின் விலை மட்டும் ரூ. 1 லட்சம் இருக்கும்… ஆனா ரூ. 300 ரூபாய் கொடுக்க தயங்குகிறார்” என வீடியோ பதிவேற்றிய நபர் குறிப்பிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஆட்டோ டிரைவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

பேச்சு தொடர்பின் போது, பெண் மீண்டும் மீண்டும் “ஆட்டோ டிரைவர்கள் நாகரிகமாக பேசவேண்டும்” என வலியுறுத்த, டிரைவர் “முதலில் நீங்கள்தான் தவறாக பேசினீர்கள், இப்போது கட்டணம் கொடுக்க மறுக்கிறீர்கள்” எனத் தெளிவாகக் கூறுகிறார்.

மேலும், ” போலீஸ ஐ கூப்பிடுகிறேன், நான் ஒரு 2 நிமிஷம் டிராஃபிக் லால் லேட் ஆனேன்… ஆனா அதனால் ரூ. 300 ரூபாய் கட்டணத்தைத் தவிர்க்க முடியாது” என்று கூறும் காட்சி கேமராவில் பதிவாகி தற்போது வைரலாகியுள்ளது. பெண் கட்டணம் செலுத்தாமல் உள்ளே செல்வதும் அதில் தெளிவாக தெரிகிறது.