தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் நேற்று முன்தினம் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்ட போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி கிட்டதட்ட 41 பேர் உயிரிழந்தனர். இன்னும் பலர் மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கின்றனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. இந்த சம்பவத்தில் குளறுபடிகள் நடந்துள்ளதாக கூறி விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில் நாளை அந்த வழக்கு விசாரணைக்கு வரப்பட இருக்கும் நிலையில் சிபிஐ விசாரணைக்கு அவர்கள் பரிந்துரைப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நடிகர் விஜய் குறித்த நேரத்தை விட வேண்டுமென்றே 4 மணி நேரம் கரூருக்கு தாமதமாக வந்ததாக தற்போது எப்ஃஐஆரில் தகவல் வெளிவந்துள்ளது. அதாவது குறிப்பிட்ட நேரத்தில் நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்ற கட்டாயம் இருந்த போதிலும் அதிக கூட்டத்தை திரட்ட வேண்டும் என்ற நோக்கத்துக்காக வேண்டும் என்று விஜய் வருவதை அந்த கட்சியின் நிர்வாகிகள் தாமதப்படுத்தியுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இதன் காரணமாக நீண்ட நேரம் காத்திருந்த ஆயிரக்கணக்கான மக்கள் வெயில் மற்றும் தாகத்தினால் சோர்வடைந்தனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிறகு தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை அந்த கட்சி நிர்வாகிகள் ஒழுங்குபடுத்தவில்லை எனவும் சாலை கடைகள், கொட்டகைகள் மற்றும் மரங்களின் மீது அவர்கள் அமர்ந்திருந்த நிலையில் மரம் முறிந்து அதில் இருந்தவர்கள் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டது. பொதுமக்கள் மீதும் விழுந்ததால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு அசாதாரண சூழல் நிலவியது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.