சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே வரலாறு காணாத அளவுக்கு உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இன்றும் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 85600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று ஒரு கிராம் 10700 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் கடந்த 9 நாட்களில் மட்டும் தங்கம் விலை 3280 ரூபாய் வரையில் அதிகரித்துள்ளது. இது நகை பிரியர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 11672 ரூபாய்க்கும், ஒரு சவரன் 93376 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையும் கிராமுக்கு ஒரு ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் 160 ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி 160000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.