கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தையும் அதிர்வையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை 30 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு தவெக ஆதரவாளரும் பிரபல சினிமா விமர்சகருமான ப்ரசாந்த் ரங்கசாமி தனது X தளத்தில் “கரூர் அடிச்சு தூக்கிட்டாப்ல” என விஜய்க்கு ஆதரவாக பதிவு செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த பதிவுக்கு, “15 மரணம் உங்க காதுக்கு வரவில்லையா?” என நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகி சாட்டை துரைமுருகன் பதிலளித்துள்ளார். அதற்கு பதிலாக, “கரூர் பயணம் விஜய்யின் கடைசி சுற்றுப்பயண பேச்சாக இருக்கலாம்” என ப்ரசாந்த் ரங்கசாமி குறிப்பிட்டது மேலும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த கரூர் சம்பவம் அரசியல் வட்டாரத்திலும், பொதுமக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி, எதிர்கால அரசியல் நிலைமைகளில் தாக்கத்தை உண்டாக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.