தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய், இன்று நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டார். திருச்சி நகரத்திலிருந்து சாலை மார்க்கமாக நாமக்கலுக்குச் சென்ற விஜய்க்கு, பாதை முழுவதும் வெற்றிக்கழக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இடையிடையே திரளாகக் குவிந்த பொதுமக்கள், அவரை பார்க்க  சாலையோரம் காத்திருந்தனர்.

பிரசாரம் நடைபெற இருந்த நாமக்கல் கே.எஸ்.திரையரங்கில், பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கூட்டம் கூடியிருந்தது. இந்தக் கூட்டத்தில் விஜய் பங்கேற்கத் தாமதமான நிலையில், பிரசார வாகனத்தில் வந்த அவர், ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டார்.

இந்நிலையில், ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் சிலர் விஜய்க்கு பரிசுகள் வழங்கினர். இதில் ஒருவர், நடிகர் அஜித் மற்றும் விஜய் இணைந்து நிற்கும் புகைப்படத்தை அவரது படத்தொகுப்புப் பிரேமில் வழங்கினார். அந்தப் புகைப்படத்தில் விஜய் கையெழுத்திட்டு வாங்கிய காட்சி, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இச்சம்பவம், இருவரின் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.