கொல்கத்தா துர்கா பூஜை கொண்டாட்டத்துக்கு நடுவில், ஹூஃளி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது ரித்ரிஷா அதிகாரி என்ற இளம்பெண், இந்தியாவின் மிக உயரமான பெண் இன்ஃபுளுயன்சராக சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Ritrisha Adhikary (@ritrisha_adhikary)

193 செ.மீ. அதாவது 6 அடி 4 அங்குலம் உயரமுள்ள ரித்ரிஷா, “லேடி காளி” என ரசிகர்கள் செல்லமாக அழைக்கும் வண்ணம் வீடியோவுடன் தெருவில் வெளியே வந்தார். பின்னர் நடந்தது ஒரு சோகமும், அதிசயமும்தான்.

வீடியோவில்,  ரித்ரிஷாவை பார்த்த பெண்கள், குழந்தைகள் பலர் பயந்து பாதையை மாற்றி ஓடினர். சிலர் எதிரே வரவே தயங்கினர். ஆனால் ஆண்கள்? அவர்கள் வேற லெவல்! ஒருசிலர் வாயை திறந்தவாரு பார்த்தார்கள்… ஒருசிலர் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டே, மொபைல் எடுத்துப் படம் எடுத்தார்கள்.

ரித்ரிஷா தனது கேமராவிலேயே இந்த காட்சிகளை பதிவு செய்து, தனது இன்ஸ்டாகிராம் பக்கம் @ritrisha_adhikary மூலமாக வெளியிட்டார். இந்த வீடியோ சுமார் 18 கோடி பார்வைகள், 59 லட்சம் லைக்குகளை பெற்று வலைதளத்தை கலக்கிக் கொண்டிருக்கிறது.

உயரம் தான் என் பலம் என்று சொல்லும் ரித்ரிஷா, “Tall Girl Problems” என்ற தலைப்பில் நக்கலாகவும், உணர்வு பூர்வமாகவும் பல வீடியோக்கள் வெளியிட்டு வருகிறார். இவரை இன்ஸ்டாவில் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கின்றனர். சமீபத்தில், ஒரு பாரம்பரிய பெங்காலி புடவை அணிந்து ‘ஜை மா துர்கா’ என்கிற தீமில் வெளியிட்ட வீடியோவுக்கு மட்டும் 6 நாட்களில் 20 லட்சம் பார்வைகள் வந்துள்ளன.