சமூக வலைதளத்தில் வெளியான ஒரு காணொளி, நாய்க்கும் பூனைக்கும் இடையேயான அழகான நட்பை வெளிப்படுத்தி, பார்ப்பவர்களை நெகிழ வைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட இந்தக் காணொளியில், கண் தெரியாத ஒரு நாய், தனது பக்கத்தில் ஏதோ வந்துவிட்டதாக நினைத்து, பயந்து குரைக்கத் தொடங்குகிறது. அப்போது, அருகில் இருந்த பூனை மென்மையாக நாயின் காலைத் தொட்டு, “மியாவ் மியாவ்” என்று மெதுவாக சத்தம் எழுப்புகிறது.

View this post on Instagram

A post shared by xaabit (@xaabit)

இந்தச் செயல், “நான் தான் இங்கே இருக்கிறேன், பயப்படாதே” என்று பூனை நாயிடம் சொல்வது போல அமைந்துள்ளது. இந்த உருக்கமான காணொளியைப் பார்த்த பலரும், நாய்க்கும் பூனைக்கும் இடையேயான இந்த அன்பான நட்பைப் பாராட்டி, தங்கள் கருத்துகளை இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.