மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் அமைந்துள்ள தேவி அகில்யா பாய் ஹோல்கர் விமான நிலையத்தில் நடந்த அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ஹைதராபாதில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றும் அருண் மோடி என்பவர் தன்னுடைய மனைவியுடன் இண்டிகோ விமானம் மூலம் பெங்களூரு பயணிக்க தயாராக இருந்த போது, திடீரென ஒரு எலி அவருடைய பேண்ட் பக்கம் புகுந்து கடித்து விட்டது.

இந்த சம்பவம் செப்டம்பர் 24-ம் தேதி மதியம் 1 மணி அளவில் நடந்ததாக கூறப்படுகிறது. விமானம் கிளம்பும் நேரம் 3:05 என இருந்த நிலையில், பயணிக்கத் தயாராக இருந்த அருண் மோடி விமான நிலையத்தின் தரைத்தளத்தில் உள்ள ரீக்ளைனர் சீட்டில் உட்கார்ந்திருந்தார். அப்போது திடீரென எலி ஒன்று அவருடைய காலில் உள்ள கால்சட்டைக்குள் ஓடிப்போக, அதனைப் பிடிக்க முயன்ற அருண் மோடியை அது கடித்து விட்டது. பின்னர் அவர் உடனடியாக அவர் பேன்ட்டை கழற்றிவிட்டு எலியை பிடித்தார். இந்தக் கொடூர சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

சம்பவத்துக்குப் பிறகு, அருண் மோடி ரத்தக்கசிவுடன் விமான நிலையத்தில் உள்ள அறையில் சென்று ரேபிஸ் தடுப்பூசி கேட்க, அதற்கான மருந்துகள் அங்கு இல்லை எனக் கூறப்பட்டது. இதையடுத்து அவர் தனது பயணத்தை தொடர்ந்தபடியே பெங்களூர் சென்று அங்கு ஒரு தனியார் மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி எடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.