கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் இயங்கிவரும் ஒரு தனியார் குழந்தைகள் காப்பகத்தில் நடந்த கொடூர சம்பவம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த காப்பகத்தில் உள்ள ஒரு ஆதரவற்ற குழந்தையை , அங்கு பணியாற்றும் நபர் ஒருவர் பெல்டால் அடித்து தாக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. இந்த அதிர்ச்சி வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. சம்பவம் தொடர்பாக பொதுமக்களும், குழந்தைகள் நல அமைப்புகளும் கோபத்தையும் கண்டனத்தையும் வெளியிட்டுள்ளனர்.
சுமார் 26 குழந்தைகள் இக்காப்பகத்தில் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே குழந்தைக்கு இந்த அளவிலான கொடுமைகள் இருந்தால், மற்ற குழந்தைகளின் நிலைமை என்ன என்பதற்கான கேள்விகள் எழுகின்றன.தையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர்.
கோவை: சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட கோட்டைபாளையம் பகுதியில் இயங்கும் தனியார் குழந்தைகள் காப்பகத்திலுள்ள ஒரு ஆதரவற்ற குழந்தையை, அங்குள்ள நபரொருவர் பெல்ட்டால் கொடூரமாக தாக்கும் அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது. சுமார் 26 குழந்தைகள் இந்த காப்பகத்தில் இருக்கும்… pic.twitter.com/Ps5uUwdU1c
— PttvOnlinenews (@PttvNewsX) September 25, 2025
“>
குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் உடல்-மன நலத்தைக் கருத்தில் கொண்டு, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலவிதமாக எழுந்து வருகின்றன. சம்பவத்திற்குப் பிறகு அந்தக் காப்பகத்திற்கான அனுமதி, பராமரிப்பு தரம் ஆகியவை மீண்டும் ஆய்வு செய்யப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.
