பிரபல இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் பின்னணிப் பாடகர் சைந்தவி தம்பதியர், விவாகரத்து வழக்கில் சென்னையின் குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நேரில் ஆஜராகினர்.

பல மாதங்களாக நடந்து வரும் இந்த வழக்கில், வரும் அக்.30-ம் தேதி இறுதி தீர்ப்பு வழங்கப்பட உள்ளதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்நிலையில், தங்களது குழந்தையை வளர்ப்பதில் சைந்தவிக்குச் சுதந்திரம் வழங்குவதில் தனக்குத் தடை இல்லை எனவும், எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லையெனவும் ஜி.வி.பிரகாஷ் கூறியுள்ளார்.

10 ஆண்டுகளாக காதலித்து பின்னர் திருமணமாகிய ஜி.வி – சைந்தவி தம்பதியர், கடந்த 2024 ஆம் ஆண்டில் தங்கள் விவாகரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இந்த தகவல் திரையுலகத்திலும், ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது, வழக்கு முடிவடைந்து தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த பிரபலத் தம்பதியின் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கவிருக்கிறது.