“கல்வியால் வாழ்க்கை மாறும் என்பதை என் குடும்பம் வழியாக நான் உணர்ந்தவன்” என நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசின் கல்வி முன்னேற்றங்களை கொண்டாடும் வகையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற “கல்வியில் சிறந்த தமிழ்நாடு” விழாவில் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது பேசினார் அவர், “நான் படித்தது பியோமெடிக்கல் என்ஜினியரிங். ஆனால் இன்று நான் சினிமாவில் இருக்கிறேன். இது சம்பந்தப்பட்ட வேலை அல்ல. எந்த ஒரு பின்னணியும் இல்லாமல் சினிமா துறையில் நுழைவது மிக கடினமான ஒன்று. எனவே சவால்கள் வந்தால், ‘எனக்குத் தகுந்த கல்வி இருக்கிறது, வேறு வேலையை செய்யக்கூடிய திறமை இருக்கிறது’ என்றார்.
மேலும் அவர் கூறுகையில், “என் அப்பா காலில் நடந்து பள்ளிக்கு சென்றவர். நான் ஆட்டோவில் பள்ளிக்கு சென்றேன். அவர் ஒரு வேளை உணவு சாப்பிட்டவர். நான் மூன்று வேளை உணவு சாப்பிட்டேன். கல்வி நம்மை முன்னேற்றும். ஒரு தலைமுறையில் ஒருவர் படித்தால், அடுத்த தலைமுறைகளின் வாழ்க்கை மேம்படும். மாணவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கும் தமிழக அரசுக்கும், முதலமைச்சருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்”, என்று தெரிவித்தார்.
