நடிகர் ஷேன் நிகாம் நடித்த 25-வது திரைப்படமான ‘பல்டி’ நேற்று தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியானது. கபடி விளையாட்டை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தில், நடிகர் சாந்தனு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் பிரீத்தி அஸ்ரானி மற்றும் பலர் இணைந்துள்ளனர். இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்றியுள்ளார். இப்படத்தை சந்தோஷ் குருவில்லா தயாரித்துள்ளார்.
படத்தின் “ஜாலக்காரி” என்ற பாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில், திரைப்பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் சாந்தனு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜய் தொடங்கிய தவெக கட்சியில் சேரும் வாய்ப்பு உண்டா? என ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த சாந்தனு, முதலில் சினிமாவில் வெற்றிப் பெற வேண்டும். பிறகு தான் மற்ற விஷயங்களைப் பற்றி யோசிக்கலாம்” என பதிலளித்தார். மேலும் இவர் கூறிய இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
