பஞ்சாப் மாநிலம் ஃபசில்கா பகுதியில் கொடூரம் நடந்துள்ளது. ஆட்டோ ஓட்டுநர் சந்திர பிரகாஷ் என்பவரை, அவருடன் பழகி வந்த பெண் மற்றும் அவரது மகன் வீட்டிற்குள் அழைத்து சென்று தாக்கியுள்ளனர். தாக்குதலின் போது, மரத்தாலான சப்பாத்தி கட்டையை கொண்டு அவரது தனிப்பட்ட உறுப்புகளில் காயம் ஏற்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின்போது 8½ நிமிட வீடியோ ஒன்றும் படம் பிடிக்கப்பட்டு, சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
சந்திரபிரகாஷ் தற்போது ஃபசில்கா அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கும், அந்த பெண்ணுக்கும் இடையில் பணம் தொடர்பான வாக்குவாதம் நடந்துள்ளதாகவும், அதற்குப் பழிவாங்கும் விதமாக இந்த தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. சமூக வலைதளங்களில் வீடியோ பரவியதன் மூலம் இந்த சம்பவம் வெளியே வந்தது.
இந்த விவகாரத்தில், போலீசார் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் அவரது மகன் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. இது போன்ற கொடூர சம்பவங்கள் மீண்டும் நடக்காத வகையில் போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
