மாதவிடாய் என்பது பெண்களின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டமாக இருப்பது அனைவரும் அறிந்த விஷயம். இதனைத் தாண்டி, ஒரு குடும்பம், தனது மகளின் முதல் மாதவிடாயை கொண்டாடும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. “ஐஷா” என்ற இளம்பெண் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான @its\_aayushaaa-வில் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த வீடியோவுக்கு 1.5 கோடி பார்வைகள், 10 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளன.
View this post on Instagram
வீடியோவில், வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த ஐஷாவை, அவரது குடும்பத்தினர், பெரியவர்களும், சிறியவர்களும் சேர்ந்து புனிதமாக மரியாதை செய்து, அவருடைய காலடியில் பணம் வைத்து, அன்புடன் ஆசீர்வதிக்கின்றனர். இந்த அன்பையும், ஆதரவும் பார்த்த ஐஷா கண்களில் கண்ணீர் விட்டு உருகுகிறார்.
இதனை பார்த்த வலைதள பயனாளிகள், “இது தான் உண்மையான செல்வந்த குடும்பம்”, “ஒவ்வொரு பெண்ணும் இப்படி ஒரு மரியாதை பெறவேண்டும்” என உருக்கமாக கருத்து தெரிவித்துள்ளனர். சமூகத்தில் மாதவிடாய் தொடர்பான தவறான எண்ணங்களை மாற்ற இந்த வீடியோ ஒரு முக்கியக் கட்டமாகவே பார்க்கப்படுகிறது.
