பிரிட்டிஷ் டிராவல் விளாகர் அலெக்ஸ் வாங்டர்ஸ், இந்தியா–பாகிஸ்தான் மக்களிடையே உண்மையிலேயே வெறுப்பு இருக்கிறதா என்பதைத் தேர்வு செய்ய ஒரு வித்தியாசமான முயற்சி எடுத்துள்ளார். பாகிஸ்தானின் லாஹூர் நகரில், இந்திய கிரிக்கெட் அணி ஜெர்ஸி அணிந்து நடந்து கொண்டிருந்த அவரின் வீடியோ, தற்போது 1.5 கோடி பார்வையாளர்களைக் கடந்துள்ளதாம். வீடியோவில், “இந்த ஜெர்ஸியுடன் பாகிஸ்தானில் நடந்தால் என்ன ஆகும் என்று பார்க்க வந்தேன்” என்று அலெக்ஸ் கூறுகிறார்.
View this post on Instagram
வீடியோவில் ஆரம்பத்தில் சிலர் அவரைப் பார்ப்பது போல் தோன்றுகிறது. “சற்று வித்தியாசமான பார்வைகள் கிடைக்கிறது…” என்று அவர் கூறும் போது, சூழ்நிலையும் பதட்டமாக இருந்தது. ஆனால், சில நிமிடங்களிலேயே சூழ்நிலை மாறியது. அருகிலிருந்த கடை ஒன்றில் சிறுவர்கள் உண்ணும் போது அவரை அன்புடன் அழைத்து, உணவுக் கூட்டத்தில் சேர விரும்பினர். இது அலெக்ஸ்க்கு பெரும் ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.
வீடியோ முடிவில், “எதுவும் மோசமாக நடக்கவில்லை, பாகிஸ்தான் மக்கள் மிகவும் நன்றாக பேசினார்கள்” என்று கூறியிருந்தாலும், சமூக வலைதளங்களில் இந்த வீடியோவுக்கு கலந்த கருத்துகள் வந்துள்ளன. சிலர் “பார்வைகளும், பேச்சும் உன்னுடைய வெளிநாட்டு முகத்துக்கு ஒரே ஜெர்ஸியை உள்ளூர் ஒருவர் போட்டிருந்தா பாக்கலாம்” என்று சவால் விட்டுள்ளனர். “இனி நான் இந்திய தெருல பாகிஸ்தான் ஜெர்ஸி போட்டு நடக்கப்போறேன்” என்று அலெக்ஸ் கூறியதும், இந்த விளாக் தொடரின் அடுத்த கட்டத்துக்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.
