உலகின் முதல் பணக்காரராக உள்ள எலான் மஸ்க், டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களையும் எக்ஸ் வலைத்தளத்தையும் நடத்தி வருகிறார். அண்மையில் எலான் மஸ்க்கிற்கும் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கும் இடையே நடந்த வார்த்தை மோதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், எலான் மஸ்க்கின் தந்தை எரால் மஸ்க் (79) மீது குழந்தைகள் சிலருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் எரால் மஸ்க்கின் குடும்ப வாழ்க்கையை சுற்றி பரவி, உலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளன.

ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை எரால் மஸ்க் முற்றிலும் மறுத்து அவை முட்டாள்தனமானவை, ஆதாரமற்றவை, போலி என்று அவர் தெரிவித்துள்ளார். எலான் மஸ்க்கின் தந்தையாக இருந்தாலும், இந்த விவகாரம் அவரது குடும்பத்தை பெரிதும் பாதித்துள்ளது. குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரிகள், உண்மைத்தன்மையை ஆராய்ந்து வருகின்றனர்.